உலகம்

மக்காவின் முதல் புகைப்படம் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவின் முதல் புகைப்படம் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது

 

பின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 ஆம் ஆண்டுகளில் தனது அனுபவம் குறித்து கடந்த 1889ம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.

 

அந்தப் புத்தகத்திற்காக மக்காவை முதன்முதலில் அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார். மேலும் அங்கு வாழ்ந்த சில மக்களையும் பாரம்பரியம் மாறாமல் புகைப்படம் எடுத்திருந்தார். 1884-1885 ஆண்டுகளில் மக்காவில் தனது அனுபவங்களை கபார் பதிவு செய்தார். 1886 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மக்கா மற்றும் அதன் பகுதிகள் குறித்து 250 புகைப்படங்கள் மற்றும் ஹஜ் வரும் இஸ்லாமியர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து உள்ளார். கபாரின் படைப்பு கலை திறமையை வெளிக்காட்டியதாக ஹர்கிரன்ஜே தனது புத்தகத்தில் அதனை வெளியிட ஒப்புகொண்டார்.

 

இந்நிலையில் மக்காவின் புகைப்படம் இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தப் புகைப்படம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.