இலங்கை

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஹட்டனில்.

.

“மலையகத்தில் மலரும் மாற்றம்” எனும் தொனிப்பொருளுக்கமைய மலையக சகோதரத்துவ
இயக்கத்தின் ஏற்பாட்டில் – ஜனாதிபதி தேர்தலுக்கான மக்கள் விடுதலை முன்னணியின்
மாபெரும் மக்கள் கூட்டம் இன்று அட்டன் பிரதான
பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இந்த மக்கள் கூட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரு, பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ,அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கிட்ணன் , இலக்கியவாதி
அந்தோனிஜீவா மற்றும் பெருந்திரளான
ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

-பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்-