இலங்கை

மக்கள் சீனக் குடியரசின் 70வது தேசிய தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இசை நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக பங்கேற்பு..…

மக்கள் சீனக் குடியரசின் 70வது தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி நேற்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன  கலந்துகொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சீன தூதுவர் சென்ங் சுவான் (Chang Xueyuan) உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.