Breaking News

மக்கள் என்னை அறிவார்கள் – அவர்கள் தீர்மானிக்கட்டும் – சொல்கிறார் கோட்டா

‘ வெளிநாடுகளில் எனக்கெதிராக வேலைகளை செய்வோர் அதனை செய்யட்டும். இலங்கையின் மக்கள் நான் யார் என்று அறிவார்கள்.அது உள்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது ‘

இவ்வாறு ‘ தமிழன்’ செய்தி இணையத்துக்கு கருத்துத் தெரிவித்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச.அமெரிக்காவில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

‘ அவர்கள் சிவில் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்கள் . அது விசாரிக்கப்படுவதற்கும் இங்கு நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை.அது என்னை பாதிக்காது.ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட தீர்மானிக்கப்பட்டால் அதனையும் அது பாதிக்காது.செய்பவர்கள் செய்யட்டும்.சொல்பவர்கள் சொல்லட்டும்.நாட்டு மக்கள் என்னை நன்கு அறிவார்கள்.’

இப்படி குறிப்பிட்டார் கோட்டாபய.