உலகம்

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தியாவில் மீண்டும் பெரும்பான்மையோடு மோடியின் ஆட்சி!

இந்திய மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்ட வாக்குப்பதிவுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 343 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 88 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 111 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தில்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.