உலகம்

மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக முன்னிலை

மக்களவைத் தேர்தல் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய தேர்தல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இது நாட்டின் 17-வது மக்களவைக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

17-வது மக்களவைக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது.

நிலவரப்படி நாடு முழுவதும்342 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 88 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் தலைவர் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான வயநாட்டில் ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளார்.

எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் பின் தங்கியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லாட்டின் மகன் வைபவ் கெல்லாட் பின் தங்கியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், திருச்சி வேட்பாளர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர். பாலு, தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் முன்னில்லை, ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகிதியில் 32 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறார். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்து வருகிறார்.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 2 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இதனிடையே தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது. தேர்தலுக்கு பொறுப்பேற்க கூடிய தன்னாட்சி அமைப்பாக விளங்கும் ஆணையத்தின் முடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.