Breaking News

மகாவலியில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

மகாவலி கங்கையில் சிறுவனின் சடலமொன்றை மீட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில் தமது நண்பர்களோடு மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போனதாகவும் பின்னர் மகாவலி கங்கையின் சேலம்பிரிஜ் பகுதியில் இன்று மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

(17 )வயதுடைய நவலப்பிட்டி, மாகும்புர பகுதியை சேர்நத மொகமட் உஸ்மாத் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

( நோட்டன்பிரிஜ் நிருபர் )