இலங்கை

மகாத்மா காந்தி பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !

– யாழ்.செய்தியாளர் –

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது காந்தியின் உருவச்சிலைக்கு – நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் காந்தி பாடலும் இசைக்கப்பட்டது

இந் நிகழ்வில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்