உலகம்

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் ஜுன் மாதம் அறிமுகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ப்ரெக்சிட் ஒப்பந்தம் ஜுன் மாதம் முதல்வாரத்தில் நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பாக நேற்றையதினம் பிரித்தானிய எதிர்கட்சியான தொழில் கட்சியின் தலைவர் ஜெரமி கோபன் உடன், பிரதமர் தெரேசா மே நேற்று கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் சாதகமானதாகவும், வலுவானதாகவும் இருந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றும் இந்த கலந்துரையாடல் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.