உலகம்

ப்ரான்ஸ் குண்டு வெடிப்பு தொடர்பில் நால்வர் கைது

ப்ரான்ஸில் கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ப்ரான்ஸ் – லியோன் நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றில் இருந்த குண்டு வெடித்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான விசாரணைகளை அந்த நாட்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
இந்த குண்டை வெடிக்க செய்தவர் என்ற சந்தேகத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் கைதானதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு பெண் உள்ளடங்களாக 3 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.