போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
ருவன்வெல்ல பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
ருவன்வெல்ல-கோனகல்தெனிய பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரவிலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து போலி 1000 ரூபாய் நாணயத்தாள்கள் இருண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.