இலங்கை

போர்க் குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் – வரதர் கோரிக்கை !

யாழ்.செய்தியாளர்

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை.ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.ஆனால் எதோ கோத்தபாய மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டே.எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்.- என்றார் வரதராஜப்பெருமாள்