உலகம்

போர்க்குற்ற விசாரணையை நிராகரித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் !

 

அமெரிக்கப் படையினரால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது

அமெரிக்கப் படைகள் மற்றும் சி.ஐ.ஏ உறுப்பினர்கள் 2003-2004 ல் நடத்திய ஆப்கானிஸ்தான் போர்க்குற்றங்களை விசாரிக்க 2017 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது

விசாரணைகளுக்கு ஆப்கான் அரசு போதிய ஒத்துழைப்பு வழங்காமையே நிராகரிப்புக்கான முக்கிய காரணமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இது சர்வதேசத்துக்கு கிடைத்த வெற்றி எனது தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.