உலகம்

போயிங் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளுக்குள் குப்பை

 

‘போயிங்’ நிறுவனம் அதன் சிக்கலுக்குரிய ‘737 மெக்ஸ்’ விமானத்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், அந்த நிறுவனம் புதிய பாதுகாப்பு சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

பல விமானங்களின் எரிபொருள் தாங்கிகளுக்குள் குப்பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் இது “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என போயிங் 737 திட்டத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை ‘737 மெக்ஸ்’ விமானம் மீண்டும் சேவைக்குத் திரும்புவதை தாமதப்படுத்துமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு பாரிய விபத்துக்கள் இடம்பெற்ற பின்னர், ஒன்பது மாதங்களுக்கு இந்த ரக விமானங்கள் சேவையில் ஈடுபடாமல் இருக்கின்றன.

737 மெக்ஸின் இறக்கை எரிபொருள் தாங்கிக்குள் குப்பைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்கையில், விமானங்களின் எரிபொருள் தாங்கிக்குள் குப்பைகளை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது வலுவான விசாரணை மற்றும் உற்பத்தி முறையில் உடனடி திருத்த நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

வொஷிங்டனின் சியாட்டலை மையமாகக் கொண்ட போயிங், அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது