இலங்கை

போதைவஸ்து வியாபாரத்தை இயக்கும் நிலையம் வெலிக்கடை சிறைச்சாலை” – மைத்ரி குற்றச்சாட்டு !

 

நல்ல சமுதாயமொன்றை நாட்டில் கட்டியெழுப்ப வெலிக்கடை சிறைச்சாலை தடையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ரெஜி ரணதுங்க அறிவியல் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ அண்மையில் கடலில் கடத்தப்பட்ட 270 கிலோ ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றினர்.அந்த கடத்தல்காரர்களின் போன்களை சோதனையிட்டபோது அந்த கடத்தல் வெலிக்கடை சிறைக்குள் இருந்தே இயக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.சி.ஐ.டி இது குறித்து விசேட விசாரணைகளை நடத்துகிறது.” – என்றார் ஜனாதிபதி