போதைப்பொருட்களுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையின் பதிவு இலக்கத்தை கொண்டிருந்த மூன்று படகுகள் கேரள கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் 7 பேர் கடலில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகுகளில் இருந்து 200 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள், 60 கிலோ கிராம் ஹசீஸ் மற்றும் மேலும் சில உபகரணங்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.