உலகம்

பொஸிலாரின் துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் பார்வையிழப்பு


ஹொங்கொங் பொஸிலார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்தோனேசிய ஊடகவியலாளர் ஒருவர்
நிரந்தரமாக பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் தொடரும் போராட்டங்களினால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, இறப்பர் தோட்டா குறித்த ஊடகவியலாளரின் வலது கண்ணில் பட்டுள்ளதோடு, அவரது பார்வை பறிபோயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெபி மெகா இந்தா, என்ற குறித்த பெண் ஊடகவியலாளர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறிக்கையிட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பொலிஸாரின் துப்பாக்கியில் இருந்து வந்த, தோட்டா அவர் அணிந்திருந்த பாதுகாப்பு கண்ணாடிகளை தாக்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதேவேளை, நவீன சீனா உருவாக்கப்பட்ட 70 ஆம் ஆண்டு நிறைவு நாளில் ஹொங்கொங்கில் இடம்பெற்ற வன்முறைகளே ஹொங்கொங்கின் வரலாறு கண்ட மிகப்பெரிய வன்முறை நாள் என ஹொங்கொங்கின் பொலிஸ் மாஅதிபர்  அறிவித்துள்ளார்.

நேற்று இடம்பெறற போராட்டங்களின் போது காவற்துறையினர் மீதும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர்,  இந்த தாக்குதல்களின் 30 பேர் காயடைந்துள்ளதாகவும் வன்முறைகளில் ஈடுபட்ட 269 பேர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன்மாதம் முதல் ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இவ்வாறு பெரும் தொகையில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதன் முறையாகும்.