இலங்கை

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்ட சஜீவ மெதவத்த பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பணியகத்தின் புதிய பணிப்பாளராக சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.