பொலிஸ் பரிசோதகரை துப்பாக்கியால் சுட முயன்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
சிலாபம் பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இருவருக்கிடையில் தொழில் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் பொலிஸ் பரிசோதகர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள குறித்த பொலிஸ் சார்ஜன்ட் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், குறித்த சார்ஜன்டை பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.