இலங்கை

பொலிஸ் செய்திகள் !

பொலிஸ் செய்திகள் !

– ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவரை தர்கா நகரில் கைது செய்தது பொலிஸ் .அவரிடம் இருந்து மூன்று போன்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் சொல்கிறது

– தீவிரவாதிகள் குறித்து தகவல் வழங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா 5 லட்ச ரூபாவும் மூன்று முஸ்லிம் பொதுமகன்களுக்கு தலா 10 லட்ச ரூபாவும் வழங்க பொலிஸ் திணைக்களம் முடிவு

– பூகோட ,குமாரிமுல்லையில் தவ்ஜீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது .இரண்டு அடையாள அட்டைகள் அவரிடம் மீட்பு

– கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சுப்ரமணியம் கிறிஸ்தோபர் என்பவரின் தங்க மாலையை திருடிய நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி அலுவலக சிற்றூழியர் ஒருவரை எதிர்வரும் 17 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க கோட்டை மேலதிக நீதவான் இன்று உத்தரவு .பொலிஸ் சவச்சாலையில் இந்த மாலை காணாமற் போயிருந்தது.

– இரண்டு லட்ச ரூபா போலி நாணயத்தாள்களுடன் கிளிநொச்சி ,கனகபுரத்தில் ஒருவர் கைது.

– ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை தயாரிக்க உதவிய கணனி மற்றும் பிரதியெடுக்கும் இயந்திரந்தை உலக வர்த்தக நிலைய பொது வர்த்தக அமைச்சில் இருந்து கைப்பற்றினர் பொலிஸார் .