இலங்கை

பொலிஸ் செய்திகள்…

* பானந்துறை வடக்கு திங்கல வீதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளச் சென்ற பொலிஸாருக்கு பாலித தெவரப்பெருமவினால் எதிர்ப்பு

* நாராஹென்பிடியின் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான காரியாலயத்தில் வைத்து மொறட்டுவை டிப்போ முகாமையாளர் மீது தாக்குதல்

* கஞ்சா மற்று ஹெரோயின் போதைப்பொருளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

* ராகம் மஹர சிறைச்சாலைக்குள் பற்பசை டியுபிற்குள் மறைத்து வைத்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

* 29,000 சட்டவிரோத சிகரட்டுக்களை வைத்திருந்த சீன நாட்டுப் பிரஜை கல்கிஸ்ஸ பொலிஸாரினால் கைது.

* கிரிந்திவெல பகுதியில் கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது.

* கொம்பனித் தெருவிலுள்ள மின்சார சபை தலைமையகத்திற்கு பின்புறத்திலிருத்து அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு