இலங்கை

பொலிஸ் செய்திகள் !

 

* சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருர் இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருட்களை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள். அதனையடுத்து பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

* மட்டக்குளியில் 50 லட்ச ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

* கைது செய்யப்பட்ட நாமல்குமார மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ டி யினரிடம் ஒப்படைப்பு

* இதுவரைகாலம் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு,குற்றப் புலனாய்வுத் திணைக்கள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டது.

* குளியாப்பிட்டி பிரிவு பொலிஸ் அத்தியட்சர் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம்

* பலாங்கொடை ,வெலெகும்புரவில் ரி.56 துப்பாக்கியும் 9 ரவைகளும் மீட்பு

* சிலாபம் ,கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 பேர் கைது