இலங்கை

பொலிஸ் செய்திகள் !

 

* பாணந்துறை எலுவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து தொலைபேசிகள் பலவும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவிப்பு .24 கைத்தொலைபேசிகள் ,இரண்டு வொய்ஸ் ரெக்கோர்டர்கள் மற்றும் கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

* அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மொஹம்மத் ரிஸ்வியை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர மஜிஸ்திரேட் ஜெ.பி .சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட சி டிக்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

* படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற மூவரை மட்டக்களப்பு ,சவுக்கடியில் கைது செய்தது பொலிஸ் .தப்பியோடிய மேலும் சிலரை தேடி விசாரணை .

* கண்டி , தலாத்து ஒயாவில் இரவு வேளைகளில் மர்மமாக பறக்கும் ட்ரொன் கெமரா ஒன்று குறித்து பொலிஸ் விசாரணை .