இலங்கை

பொலிஸ் செய்திகள் !

 

* கொழும்பு மாநகரசபையின் மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க வீதி டிப்போவில் இருந்து 16 ரம்போ கத்திகள் மீட்பு. குப்பை தொட்டிக்குள் இவற்றை வீசியோரை தேடுகிறது பொலிஸ் .

* நீர்கொழும்பில் அண்மையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் சமரசமாக செல்ல இணக்கம் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

* தடுப்பிலுள்ள தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரை விடுதலை செய்ய ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முயன்றவரை வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுர மேலதிக மாவட்ட நீதிபதி ஜனக்க பிரசன்ன சமரசிங்க உத்தரவிட்டார்.

* பாதாள உலக புள்ளியான கஞ்சிப்பான இம்ரானின் விளக்கமறியலை ஜூலை 12 வரை நீடித்து உத்தரவிட்டார் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா.

* தியத்தலாவ கஹகொல்லவில் துப்பாக்கி ரவைகளுடன் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் மூவரின் விசாரணைகள் தீவிரவாத தடுப்பு பிரிவின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவிப்பு.