இலங்கை

பொலிஸ் செய்திகள் !

* காலி ,தலாபிட்டிய வீடொன்றில் 10 உரப்பைகளுக்குள் போடப்பட்ட நிலையில் இருந்த இராணுவ சீருடைகள் மீட்பு – சந்தேக நபர் ஒருவர் கைது. பியகமவில் தைக்கப்பட்ட இந்த சீருடைகள் எப்படி காலிக்கு வந்தன என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பம்.

* நீர்கொழும்பு , பாதுராகொட – வெயாங்கொட வீதியோரம் இருந்த பை ஒன்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகளும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பல்லேவல பொலிஸார் தெரிவித்தனர் .

* பேராதனை ,வத்துறகும்புர தேயிலை தோட்டமொன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிக்குரிய 24 ரவைகள் மீட்பு

* சாய்ந்தமருது தாக்குதல் சம்பவம் தொடர்பில் தவறான தகவல்களை கூறிய களுத்துறை எம்.பி. பியல் நிஷாந்தவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 6 மணி நேரம் விசாரணை

* நீர்கொழும்பு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணை.

* வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் தலா 5 லட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை – வெளிநாடு செல்லவும் தடை