இலங்கை

பொலிஸ் செய்திகள் !

 

* கட்டுகஸ்தோட்டை சோதனைச் சாவடி ஒன்றில் சொகுசுக் கார் ஒன்றை வழிமறித்த பொலிஸ் அதில் இருந்து சீனத் தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் 7 ரவைகளை மீட்டதுடன் இருவரை கைது செய்துள்ளது.

* இரத்மலானை பிரிவெனா வீதியில் தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் ஒருவர் கைது.ஒரே நேரத்தில் 12 சிம் கார்டுகளை அதில் பொருத்தி பயன்படுத்தலாமென பொலிஸ் கூறுகிறது. இந்த சந்தேக நபர் 50 சிம் கார்ட்டுகளை ஒழுங்கை ஒன்றில் வீசிவிட்டு சென்றதை கண்ட சிலர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸ் அவரை கைது செய்தது.

* காலியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 47 பேர் கைது

* அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸவில் மௌலவி ஒருவர் உட்பட மூவர் கைது. 5 லட்ச ரூபா பணமும் அவர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

* இரத்தினபுரியில் மௌலவி ஒருவர் 15 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஐ. எஸ் இயக்கம் சம்பந்தமான புத்தகங்களை அவர் தனது சகோதரனுக்கு வழங்கியிருந்தார். நீர்கொழும்பில் கைது செய்யப்பட்ட சகோதரன் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மௌலவி கைது செய்யப்பட்டார்.

* பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் ரீ ஷேர்ட்டுக்கள் – அமைப்பின் முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு .