இலங்கை

பொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்

ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 11 பேர் நேற்று நடந்த அபாயகரமான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மீகஹவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் வாகனம் மற்றொரு வாகனம் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வீதி ஒழுங்குகளை பின்பற்றாமல் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்காக வார இறுதியை இலக்கு வைத்து சிறப்பு போக்குவரத்து நடவடிக்கையை பொலிஸார் நாளை தொடங்கவுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.