இலங்கை

பொலிஸ் ஆயுதக்களஞ்சியசாலையில் இரு கைதுப்பாக்கிகள் மாயம் – விசாரணை ஆரம்பம்

 

நுவரெலியா பொலிஸ் வலயத்திற்குட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின்
ஆயுத களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைத்துப்பாக்கிகள்
காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில்
விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் சுகத்தபால
தெரிவித்தார்.

அக்கரபத்தன பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையில் எம்.34 ரக துப்பாகிகள் காணாமல் போனதாக கடந்த 23 ம் திகதி களஞ்சியசாலைக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினால் அக்கரபத்தனை பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் முுறைப்பாடு செய்யப்டிருந்தது,

இதனையடுத்தே காணாமல் போன போன கைத்துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் விசாரணைகளை இடம்பெற்று வருகின்றன .

(நோட்டன்பிரிஜ் நிருபர் – எம் கிருஸ்ணா )