உலகம்

பொலிவிய சர்ச்சைக்குரிய தேர்தலில் எவோ மோறெல்ஸ் மீண்டும் வெற்றிபொலிவியாவில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எவோ மோறெல்ஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்த தேர்தலில் எவோ மோரல்சுக்கும் முன்னாள் ஜனாதிபதி புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

எனினும் தேர்தல் முடிவுகளில் இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார்லசுக்கு 36.51 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெற்றி மூலம் நான்காவது முறையாக எவோ மோரல்ஸ்  ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

எனினும் தேர்தல் முடிவை ஏற்காத கார்லஸ் மெசா வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதால் வாக்கு எண்ணும் நடைமுறையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.