உலகம்

பொலிவிய அரச தலைவர் பதவி இழப்பு; சதி என்கிறது ரஷ்யா

பதவியிழந்த பொலிவிய ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அரச தலைவர் ஏவா மொராலஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டமையை அடுத்து அந்த நாட்டில் மோதல்கள் வெடித்தன.

இந்நிலையில், இதுவொரு சதி முயற்சி என ரஷ்யா அறிவித்துள்ளது.

எனினும் இடைக்கால அரச தலைவராக தன்னைத்தானே அறிவித்துள்ள ஜன்னீனே யான்யிசுடனும் சேர்ந்து பணியாற்றத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு வலதுசாரி செனட் உறுப்பினரான ஜன்னீனே யான்யின்சும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஏவா மொராலஸ் தனது உயிருக்கு ஆபத்து இருந்ததால், மெக்சிகோவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மொராலசின் சோசலிச இயக்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வில் பங்கெடுக்காத நிலையில்இ ஜன்னீனே யான்யிஸ் தன்னைதானே இடைக்கால அரச தலைவராக அறிவித்துள்ளார்.

அரசியல் சாசன விதிகளுகளுக்கு முரணாக கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாகவும் அரச தலைவர் பதவிக்கு மொராலஸ் போட்டியிட்டமையே இந்தப்பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.