இலங்கை

பொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு

 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்கேபல் தோட்டபகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இறந்த நிலையில் சிறுத்தை புலியின் உடல் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டபகுதியில் வேட்டையாட வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்குண்ட சிறுத்தை புலியின் கழுத்து பகுதி இறுகிய நிலையில் வளையினை உடைத்து கொண்டு அருகாமையில் இருந்த கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. ஏழு அடி நீளம் கொண்ட இந்த புலிக்கு எட்டு வயதாக இருக்கலாமென என நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்

பொலிஸார் ஊடாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைப் புலியின் சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி நீதவானின் பணிப்புரைக்கமைய மீப்பே மிருகவைத்தியசாலைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலையால் உணவு மற்றும் நீர் தேடி வந்த சிறுத்தை புலியே இவ்வாறு பொறியில் சிக்குண்டு இறந்திருக்கலாம் எனவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா