இலங்கை

பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி – தாக்குதல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு – கேட்கிறது ஐ.தே.க

 

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு மீண்டும் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக இன்று அலரி மாளிகையில் நடந்த ஆளுங்கட்சிக் குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் 89 எம் பிக்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென இங்கு பலர் வலியுறுத்தினர் .

அதேசமயம் தாக்குதல் குறித்தான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதமொன்றை கோருவதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.