இலங்கை

பொதுவேட்பாளராக களமிறங்க சம்பிக்கவும் வியூகம் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளூர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன.

எதிர்வரும் 14 ஆம் திகதி அவர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கட்சி விழா ஒன்றை பெரும் எடுப்பில் நடத்துகிறார் அமைச்சர் சம்பிக்க. கட்சித் தலைவர்கள் பலருக்கு அதற்காக அழைப்பு விடுத்துள்ள அவர் ,அன்றைய தினம் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரென தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சம்பிக்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன .