Breaking News

”பொதுத்தேர்தலுக்கு பின்னர் பொதுபலசேனா கலைக்கப்படும்” – ஞானசார தேரர் அறிவிப்பு !

 

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படும் என்று ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

இன்று (19) ராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது ,

“சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் நாட்டின் அரசாங்கத்தை நிறுவ முடியாது என்ற தவறான கருத்து இருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுடன் இது ஒரு கட்டுக்கதையாக மாறியது.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் ஒரு நல்ல அமைச்சரவையுடன் ஒரு நல்ல பயணத்திற்கு செல்ல முடியும். நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஒரு நல்ல தலைமை இருக்கிறது. எங்கள் அமைப்பு இனி தேவையில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார் ஞானசார தேரர் .