உலகம்

பொங்கல் குறித்த அறிக்கையால் சர்ச்சை

 

மலேசியத் தமிழர்களின் நடத்தும் பொங்கல் கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாதென அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பாக பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை புதிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதியிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த கடிதத்தில் பொங்கல் பண்டிகையானது ஒரு சமயப் பண்டிகை என்றும் அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் புதிய அறிக்கை ஒன்றில் பொங்கல் என பண்டிகையை பாடசாலைகளில் கொண்டாட எந்தவிதத் தடையுமில்லையென மலேசிய கல்வி அமைச்சு, தெரிவித்தது.

இதனையடுத்து மலேசியாவில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட் பொங்கல் வாழ்த்து தெரிவித்து மலாய் மொழியில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.