Breaking News

பொகவந்தலாவ விபத்தில் சிறுமி காயம் !

 

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் பஸ்ஸில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுமி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ – ராணி வரையில் சேவையிலீடுபடும் தனியார் பஸ் ஒன்றிலேயே இந்த சிறுமி மோதுண்டு படுகாயமடைந்துள்ளதார்.

காயமுற்ற சிறுமி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றபட்டதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார் (நோர்ட்டன் பிரிட்ஜ் செய்தியாளர் )