Breaking News

பொகவந்தலாவை 16 குடியிருப்புகளை கொண்ட லயன் தொகுதியில் இன்றிரவு தீ விபத்து !

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லொய்னோன், கல்கந்த தோட்ட
பகுதியில் 16 குடியிருப்புகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டதில் குறித்த லயன் குடியிருப்பில் உள்ள ஒரு குடியிருப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்றிரவு ஏழு மணியவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த குடியிருப்பில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே இந்த அனர்த்தம்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

 

-பொகவந்தலாவ நிருபர்-