உலகம்

பேஸ்புக் நிறுவனரின் பாதுகாப்புக்கு கடந்த வருடம் சுமார் 400 கோடி ரூபா !

 

கடந்த 3 ஆண்டுகளாக 1 டொலரை அடிப்படை ஊதியமாக பெற்று வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின், பிற செலவினங்களுக்காக மட்டும், சுமார் 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பகுதி மார்க் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அவர் பயணம் செய்யும் தனி விமானங்களுக்காக மட்டும் சுமார் 18 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்படுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையில் பேஸ்புக் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு 62 கோடி ரூபாயாக இருந்த இந்த செலவினங்கள், 2018ம் ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.