Breaking News

பேருவளையில் 10 பேர் கைது – முட்கம்பி வேலிகளாலான மர்ம ஹோட்டல் ஒன்றுக்கு சீல் வைத்தது பொலிஸ்

பேருவளையில் இன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 10 பேரை கைது செய்தது பொலிஸ்.

பேருவளை , மருதானை , மஹாகொட ,பெலஸ் பார்க் ,கோப்பியவத்த, உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகள் போன்ற சீருடை துணிகள் ,தேசிய அடையாள அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை வெத்திமராஜபுர பகுதியில் பல ஏக்கர் காணியில் பாதுகாப்பு முகாம் போன்ற ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸ் அதனை பராமரித்துவந்த இருவரிடம் வாக்குமூலம் பெற்று அந்த ஹோட்டலை சீல் வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.