இலங்கை

பேருவளையில் முஸ்லிம்கள் கோட்டாவுக்கு வரவேற்பு !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பேருவளையில் நேற்றிரவு முஸ்லிம் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

கெச்சிமலை பள்ளிவாசலுக்கும் சென்ற கோட்டாபய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அங்கு ஆசி பெற்று அங்கு வந்தோருடன் கலந்துரையாடினர்.

நேற்று நள்ளிரவு வரை இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது .