Breaking News

பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க தொல்லியல் பயிற்சி பாடசாலை பிரதமரினால் திறப்பு

மத்திய கலாசார நிதியத்தினால் சீகிரிய தொல்பொருள் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க தொல்லியல் பயிற்சி பாடசாலை பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (20) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பயிற்சி பாடசாலையின் ஊடாக புதிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளுடன் நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு பயன்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறன்கள் மற்றும் அணுகுமுறைகள் நிறைந்த சிரேஷ்ட தொல்பொருள் ஆய்வாளர்களை உருவாக்கும் அபிலாஷையுடன் இந்த தொல்லியல் பயிற்சி பாடசாலை மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஒழுக்கமான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தொல்லியல் பயிற்சி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.