இலங்கை

பேச்சுக்கு அழைத்த மைத்ரியின் கோரிக்கையை நிராகரித்தது பாராளுமன்ற தெரிவுக்குழு !

 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கோரிக்கை திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதியின் கோரிக்கை – ஜனாதிபதி தரப்பில் இருந்து தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவரினூடாக அறியக் கிடைத்ததாகவும் – பாதுகாப்பமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் இப்போது ஆராயப்படுவதால் அவரை சந்திப்பது தார்மீகமானதல்லவென தீர்மானிக்கப்பட்டதாக மேற்படி குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி இவ்வாறு பேச்சுக்கு அழைத்திருக்கலாமென குறிப்பிட்ட அவர் ,ஏற்கனவே சபாநாயகர் இதுவிடயத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பதால் வேறு ஆட்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென்றும் குறிப்ப்பிட்டர்.

இன்று தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதியின் இந்த கோரிக்கை குறித்து விரிவாக பேசப்பட்ட போதும் பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் என அறியமுடிந்தது.