Breaking News

பெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரை!

 

பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கைக்கிள் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது. இன்று (12) அதிகாலை 12.30 மணியளவில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதுடன் இதனை அண்டிய கட்டிடத்தின் சுவர்களிலும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் இதன் புகை பரவிக்காணப்படுகின்றது. அத்துடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கைக்கிள் ஒன்றும் சிறு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த பத்த வருடங்களுக்கு மேலாக இக்குடியிருப்பில் வசிக்கும் குணரெத்தினம் கோகுலராஜன் (கோகுலன் ) எனும் குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிந்துள்ளது .

கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-கேதீஸ்-