Breaking News

“பெட்டிக்லோ கெம்பஸ்” – அமைச்சரவையில் ஹக்கீம் மீது சினந்தார் சம்பிக்க !

 

மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய பெட்டிக்லோ கெம்பஸை அரசுடமையாக்க பாராளுமன்ற குழு ஒன்றின் மூலம் சிபாரிசு செய்யப்பட்ட போதும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதனை இழுத்தடித்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தார்.

அதனை ஆராய குழு அமைப்பதன் மூலம் காலம் இழுத்தடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் சம்பிக்க , இது இன்னுமொரு சைட்டம் போராட்டத்திற்கு வழிவகுக்குமென சாடினார்.

இதனால் உடனடி நடவடிக்கை எடுக்க அவர் அமைச்சரவையை வலியுறுத்தியுள்ளார்