Breaking News

“பெட்டிக்லோ கெம்பஸ்” தொடர்பான விவாதம் – அடுத்த மாதம் ஆறாம் திகதி !

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் “பெட்டிக்லோ கெம்பஸ்” தொடர்பான பாராளுமன்ற விவாதம் அடுத்த மாதம் ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் நடக்கவுள்ளது.

நேற்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜே வி பியினரால் கொண்டுவரப்படவுள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது நடக்கவுள்ளது. எந்த அடிப்படையில் இதற்கான நிதியுதவி வந்தது என்பது உட்பட்ட பல விடயங்களை அன்றைய தினம் அம்பலப்படுத்தவுள்ளதாக ஜே வி பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.