பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடை பேச்சு – 07 “அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா…” கந்தையா அண்ணன் அடித்த கவுண்டமணி பகிடியைக் கேட்டு கொல்லென சிரித்தனர் நயீம் நானாவும் புஞ்சி பண்டாவும்…

பெட்டிக்கடை பேச்சு – 07

“அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா…” கந்தையா அண்ணன் அடித்த கவுண்டமணி பகிடியைக் கேட்டு கொல்லென சிரித்தனர் நயீம் நானாவும் புஞ்சி பண்டாவும்…

“என்ன நடக்குது… சொல்லுங்களேன்…” கேட்டார் நயீம் நானா..

“ தம்பி நேற்று இரவு மினிஸ்டர் ரவி கருணாநாயக்க வீட்டில பெரிய பார்ட்டி நடந்திருக்குது… பின்வரிசை யூ என் பி எம் பிக்கள் முக்கியமான கொஞ்ச பேர் கலந்து கொண்டிருக்காங்கள்… முக்கியமான பல விசயங்கள் பேசப்பட்டதாம்…” உள்வீட்டு கதை சொல்ல ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்..

“ கந்தையா தம்பி… முழுசா சொல்லுங்க.. ஏன் இந்த திடீர் பார்ட்டி…” நாற்காலியை முன்னால் இழுத்தபடி கேட்டார் புஞ்சி பண்டா…

“ அண்ணே… அங்க தான் மேட்டர் இருக்கு.. சஜித் ஜனாதிபதி வேட்பாளரா வர ரொம்ப எதிர்ப்பு காட்டுறார் ரவி மினிஸ்டர்.. அதனால சஜித்தோட நெருக்கமா யாரும் போகாம இருக்கத்தான் இந்த பார்ட்டி… இன்றைக்கு ஒரு உள்வீட்டு விஷயம் நடக்குது சொல்லட்டா…? ..” என்று இழுத்தார் கந்தையா அண்ணன்…

“ ஐயோ அண்ணன்.. பொறுமைய சோதிக்காம சொல்லுங்க…” சிரித்தபடி நயீம் நானா சொன்னார்…

“ சஜித் பிரேமதாஸட ஒரு க்ரூப் இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மறைமுகமா சப்போர்ட் பண்ண பார்க்குது.. ஏற்கனவே ரணில் அடுத்த தேர்தலில ஜனாதிபதி வேட்பாளரா போட்டி போட பார்க்கிறாரல்லோ.. அதனால ஒரு க்ரூப் இப்போ நம்பிக்கையில்லா பிரேரணைய வெற்றியடைய வச்சு ரணிலுக்கு ட்விஸ்ட் வைக்க பார்க்குது.. சஜித் ஆதரவு கோஷ்டி இண்டைக்கு வாக்களிக்க வராம விடலாம்…” மேலும் விபரித்தார் கந்தையா அண்ணன் …

“ எப்படியோ கூட்டமைப்பு ரணிலுக்கு சப்போர்ட் பண்ணும் போல… எண்டாலும் ஜே வி பி வோட்டுக்களும் எதிரா வாரபடியா ரணிலுக்கு இண்டைக்கு கண்டம் தான்…” என்றார் புஞ்சிபண்டா..

“ தொண்டமான் கூட்டணி அமைக்க ஏற்பாடு செஞ்சு முன்னைய வடக்கு முதலமைச்சர் கூட பேசினாராம்.. ஐயா நீங்க தலைவரா இருங்கோ நான் செயலாளரா இருக்கன் … வடக்கும் மலையகமும் சேர்ந்த கூட்டணி அமைஞ்சா நல்லாயிருக்கும் எண்டு தொண்டமான் சொன்னாராம்… ஆனால் அது யதார்த்தம் இல்லை எண்டுபோட்டு முடிவு சொல்லேல்லையாம் விக்கியர்.. இண்டைக்கு கூட்டணி அமைக்க சுபநேரத்தில சைன் பண்ணுறாராம் தொண்டமான்…” இன்னுமொரு தகவலை சொன்னார் கந்தையா அண்ணன்…

“ சஜித்துக்கு எதிரா இருக்கிறதா சொல்லப்படும் எம் பி மாருக்கு வாகன பெர்மிட் குடுக்க பினான்ஸ் மினிஸ்ட்ரி ரெடியாகுதாம்.. அதை சொல்ல மறந்துபோனன்… இனி அவங்கட சப்போர்ட்டும் சஜித்துக்கு தான்..” சொல்லிச் சிரித்தார் கந்தையா அண்ணன்..

“ அமெரிக்க எம்பாஸடர் அம்மா ரணில சந்திச்சு பேசினாராம் போன கிழம… யார் அடுத்த ப்ரெசிடெண்ட் கெண்டிடேட் எண்டு அந்தம்மா கேட்க… நான் தான் எண்டு பதில் சொன்னாராம் ரணில்…” புஞ்சிபண்டா கொடுப்புக்குள் சிரித்தபடி சொன்னார் …

“ பதவிக்காலம் சம்பந்தமா இண்டைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி கேக்க போறார் மைத்ரி… டீட்டெய்ல் கிடைச்சா சொல்லுறன்…” என்றபடி கந்தையா அண்ணன் எழும்ப மற்றவர்களும் கிளம்பினர் ..