பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 09 “ என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…..” பாடலை மெதுவாக முணுமுணுத்தபடி வந்தார் கந்தையா அண்ணன்…

பெட்டிக்கடைப் பேச்சு – 09

“ என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…..” பாடலை மெதுவாக முணுமுணுத்தபடி வந்தார் கந்தையா அண்ணன்…

“அண்ணே… ஆளையே காணேல்ல… என்னாச்சு…” என்று புஞ்சிபண்டா கேட்க கடையடிக்கு வந்தார் நயீம் நானா..

“ நேத்து யூ என் பி கூட்டத்தில ஒரே கச்சாலாம்.. சஜித்துக்கு ஆதரவா கொஞ்சப் பேர் பேச ரணகளம் ஆகியிருக்கு.. இருந்தாலும் ரணில் ஐயா சமாளிச்சுப் போட்டார்.. சஜித்த போடுறதா கருவ போடுறதா அல்லது வேற யார போடுறது எண்டு தீர்மானிக்க கொமிட்டி ஒண்ட போடுவம் எண்டு ரணில் சொன்னாராம்.. கொமிட்டி எண்டு சொல்லும்போது கொஞ்சப் பேர் கொடுப்புக்குள் சிரிச்சுக் கொண்டவையாம்..கொமிட்டி எண்டாலே செத்தக் கதைதான…” என்று சிரித்தபடி சொன்னார் கந்தையா அண்ணன்…

“ ஆமா.. இப்போ ப்ரெசிடெண்ட் வேட்பாளர்மார் கூடி போச்சு..சம்பிக்க , கரு , சஜித் , ரணில் போல பல பெயர்களை சொல்ராங்க… பார்ப்போம்… மறுபக்கம் திஸ்ஸ அத்தநாயக்க , விஜயதாச ராஜபக்ச அந்த கோஷ்டியெல்லாம் தனியே ஒரு முன்னணி அமைச்சு ஒரு வேட்பாளர போட ட்ரை பண்ராங்க… இந்த முறை 8 பேர் வரை ஜனாதிபதி வேட்பாளரா இருப்பாங்க போல…” சொன்னார் நயீம் நானா..

“ நேத்து பாருங்க… சஜித்துக்கு ஆதரவா கபீர் ஹாசிம் , மலிக் , தலதா , மத்துமபண்டார, காமினி ஜெயவிக்ரம பெரேரா ,நளின் பண்டார ,எரான் ,அஜித் பெரேரா ,சுஜீவ சேனசிங்க , ஹர்ஷ டி சில்வா மட்டுமே பேசியிருக்காங்க… இதில முக்கியமான ஒரு மேட்டர் இருக்குது… மத்த எம் பிமார் எல்லாரோட நிலைப்பாடு என்ன…? அதைத்தான் எல்லாரோடையும் பேசணும் எண்டு சொன்னாராம் ரணில்…” என்று விளக்கினார் பண்டா ஐயா..

“ வேட்பாளரா தம்மை நியமிக்கவிட்டா ஒரு தொகை எம்பிக்களோட கட்சியில இருந்து வெளியே வருவார் சஜித்.. பிறகு பொதுவேட்பாளரா மைத்ரி ஆதரவை எடுத்து மத்த கட்சிகளோட ஆதரவையும் எடுப்பார்.. ஆனா அப்படி வந்தா வெற்றிவாய்ப்பு குறையும்.. சஜித் அவசரப்பட்டு செயற்படுற மாதிரி இருக்கு.. இப்படி போனா நடுரோட்டில நிக்கப் போறார்… ஏனெண்டா பொதுவேட்பாளர் இப்போ மக்களுக்கு அலர்ஜிக்…” சிரித்தபடி சீரியசான விடயத்தை சொன்னார் கந்தையா அண்ணன்…

“ கோட்டாபய வந்துட்டாரோ ?” கேட்டார் நயீம் நானா…

“ அவர் சிங்கப்பூர்ல இருந்து கிளம்பி மலேசியா போய் அங்கேருந்து தான் இங்க வருவாராம்.. இங்க வர ரெண்டு மூணு நாள் எடுக்குமாம்..” சொன்னார் புஞ்சிபண்டா…

“ கிழக்கில அமைச்சர் மனோ – பிள்ளையானை சந்திச்சதில பின்னணி இருக்கோ…கூட்டமைப்புக்கு எதிரா ஏதும் கூட்டணி வரப்போகுதோ…?” கேட்டார் பண்டா..

“அது ஒரு நட்பு அடிப்படையில நடந்ததாம்… அதுக்கு பின்னால பெரிய அரசியல் ஏதும் இல்லையாம்…ரொம்ப நாள் உள்ளுக்குள்ள இருக்க பிள்ளையானை பார்த்து பேசும்படி சில ஆக்கள் சொன்னபடியா மினிஸ்டர் மனோ போனவராம்..”
என்றார் கந்தையா அண்ணன்..

“ முஸ்லிம் எம் பி மார் அடுத்த கிழம மினிஸ்ட்ரி பதவிகள எடுக்கலாம்.. கல்முனை பிரச்சினைக்கு எழுத்துமூலம் ஒரு தீர்வ ரணில் கொடுப்பார் போல தெரியுது…” சொன்னார் நயீம் நானா..

“மரண தண்டனை நிறைவேத்திர அலுகோசு ஆக்கள் வேலைக்கு எடுத்தாச்சா.. எப்போவாம் மரணதண்டனை..?” ஆவலுடன் கேட்டார் கந்தையா அண்ணன்.

“ ஓ ரெண்டு பேர் எடுத்தாச்சாம்.. அந்த ரெண்டு பேர்ல ஒரு ஆள் முந்தி படையில வேல செஞ்ச ஒரு ஆளாம்… ரெண்டு பேருக்கும் வீடு கொடுத்து அவங்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருக்காம்.. அவங்கள் போறது வாறது எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்காம்.. வீட்டுக்கு கூட மாசத்துக்கு ஒருக்கா தான் போகலாமாம்… என்ன வேலை எண்டு வீட்டுக்கும் சொல்லக் கூடாதெண்டு ஓடர் போட்டிருக்காங்கவா” என்றார் புஞ்சி பண்டா..

“ அதுக்குள்ள மாக்கந்துர மதுஸும் கஞ்சிப்பான இம்ரானும் வேற வேறயா பிரிஞ்சு நிக்கிறாங்களாம்… வெளியில வாறதுக்கு ஆளை ஆள் போட்டுக்கொடுக்கப் போய் இப்போ ரெண்டு பேரும் பாம்பும் கீரியுமா ஆகிட்டாங்களாம்… போன 13 ஆம் திகதி கஞ்சிப்பான இம்ராண்ட பிறந்த நாள்.. அதுக்கு ஜெயிலுக்குள்ள கொண்டாட்டம் நடந்ததாம்.. ஆனா மதுஷ் அதில கலந்துகொள்ளவில்லையாம்… கடைசில கஞ்சிப்பான இம்ரான் தான் டுபாயில தான் மாட்ட காரணம் எண்டு நம்பி மதுஷ் டென்சன்ல இருக்காராம்..” என்று கூடுதல் தகவலையும் சொன்னார் பண்டா ஐயா…

“ சரி தாமரை மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் யார்… முடிவச்சா ? பசில் வருவாரோ..?..” என்று நயீம் நானா கேட்க “ அதைப்பற்றி டீட்டெய்ல் ரிப்போர்ட் அடுத்த சந்திப்பில தாறன்.. இப்போ நேரமாச்சு… கிளம்புவம்…” என்று எழுந்தார் கந்தையா அண்ணன்.. மற்றவர்களும் புறப்படத் தயாராகினர்..