பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 04 ” என்ன புஞ்சி பண்டா… ஒரே சிரிப்பா வாறீங்கள்….” குத்தலாய் கேள்வியை எழுப்பி கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்…

பெட்டிக்கடைப் பேச்சு – 04

” என்ன புஞ்சி பண்டா… ஒரே சிரிப்பா வாறீங்கள்….” குத்தலாய் கேள்வியை எழுப்பி கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்…

” இல்ல பழைய ஐ ஜீ பி பூஜித்தவையும் பழைய டிபென்ஸ் செக்கரட்டரி ஹேமசிறியையும் எரெஸ்ட் பண்ணச் சொல்லி சட்ட மா அதிபர் இப்போ இருக்கிற பதில் பொலிஸ் மா அதிபரிட்ட கேட்டிருக்கதா செய்தி வந்திருக்குதே…அத நினைச்சு சிரிச்சன்..” என்றார் புஞ்சிபண்டா..

” அதில என்ன பண்டா ஐயே சிரிக்க இருக்குது…” கேட்டார் கந்தையா..

” இல்ல…இப்படி அவங்கள எரெஸ்ட் பண்ணச் சொல்லி போன வியாழக்கிழமைல இருந்து ஓடர் போயிருக்குது …ஆனா அதை அப்படி செய்ய முடியாதுனு சொல்லுறாங்களாம் அந்த கேசுகள விசாரிக்கும் பொலிஸ் …ஏன்னா அப்படி எரெஸ்ட் பண்ணி கோர்ட்ஸுக்கு சொல்ல சரியான காரணம் இருக்கோணும்.அவங்கள எரெஸ்ட் பண்ண சரியான ரீசன் இல்லையாம்..அப்படி நிலமைல எரெஸ்ட் பண்ணி… பொறகு பூஜிதவும் ஹேமசிறியும் கோர்ட்ஸுக்கு போய் கேஸ் போட்டா பெரிய பிரச்சினையாயிடும்னு சொல்லி சீனியர் ஒப்பீசர்மார் பின்னடிக்கிறாங்களாம்…அது தான் நினைக்கிறபோ சிரிப்பு வந்திச்சுவா..” என்றார் பண்டா..

”நான் ஒரு தகவல் கேள்விப்பட்டேன்…” தனக்கும் எல்லாம் தெரியும் என்பது போல கதையொன்றை சொல்ல ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்…

” எதோ ஒரு காரணத்த முன்வச்சு தங்கள எரெஸ்ட் பண்ணினா இதுவரைக்கும் வெளியே போடாத பல முக்கிய டொக்கியூமெண்ட்டுக்கள வெளியே போட போறாங்களாம் அவங்கள் . அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில சமர்ப்பிச்சு …ஜனாதிபதி ஐயா தொடர்பா இதுவரைக்கும் வெளியே வராத பல மேட்டர்கள எடுத்து விட ரெடியா இருக்காங்களாம் அந்த ரெண்டு பேரும் ….அதெல்லாம் வெளிய வந்தா மைத்ரி ஐயாவுக்கு அரசியல் வாழ்வே இனி இருக்காத மாதிரி ஆகுமாம்…ஒரு பெரும் அரசியல் பிரளயமே வரும் அப்படிஎண்டு ஒரு அப்புக்காத்து நேற்று சொல்லிக்கொண்டிருந்தார்.எரெஸ்ட் பண்ணட்டும் செய்யுறன் வேல….எண்டு அதில ஒராள் சொல்லியிருக்கிறாராம்..” என்று பரபரப்பான தகவலை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கந்தையா அண்ணன் .

” அப்போ பூஜிதவையும் ஹேமசிறியையும் கைது பண்ணினா பல சம்பவங்கள பார்க்கலாம் போல..” இருப்புக் கொள்ளாமல் கேட்டார் நயீம் நானா..” ஓம் ஓம் ” என்று அதற்கு பக்கவாத்தியம் இசைத்தார் கந்தையா அண்ணன் .

”என்ன அண்ணா…வடக்கு அரசியல் எப்படி போகுது” கேட்டார் புஞ்சிபண்டா…

” அங்க பெரிசா ஒன்றும் விசேசமில்ல …நேத்து தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு நடந்தது…இனியென்ன அடுத்த மாகாண சபை எலெக்சன டார்கெட் பண்ணி இருக்கிறாங்கள் போல…எங்கட மாவை அண்ணர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு பிறகு ஒரு வருஷம் கழிச்சு ரிசைன் பண்ணிப்போட்டு சத்தியலிங்கம் டாக்குத்தர் ஐயாவ முதலமைச்சர் கதிரையில அமத்த ஏற்பாடுகள் நடப்பதா கேள்விப்பட்டன் …சத்தியலிங்கம் ஐயாவுக்கு பக்கத்து நாடான இந்தியாவின்ர ஆதரவு தாராளமா இருப்பதா தெரியுது…அதனால அவருக்கு அது கிடைக்கும்…பிறகு தேசியப்பட்டியலில பார்லிமென்ட் போவார் மாவை அண்ணர் ..” என்று துப்பறியும் நிபுணர் போல தகவல் சொன்னார் கந்தையா அண்ணன் …

”இன்னுமொரு இன்ரஸ்ட்டான மேட்டர் இருக்குது மல்லி..” என்று புஞ்சி பண்டா சொன்னதுதான் தாமதம்.வாயை பிளக்காத குறையாக அதை ஆவலாக கேட்கத் திரும்பினர் கந்தையா அண்ணனும் நயீம் நானாவும்…

” புதுசா கலியாணம் கட்டுற ஆக்களுக்கு நிதியமைச்சு லோன் குடுக்குது தானே… அந்த லோனுக்கு எப்ளை பண்ண தீர்மானிச்சிருக்காராம் மஹிந்த ராஜபக்ஸவின்ர மகன் நாமல் ராஜபக்ச. செப்ரெம்பரில அவர் கலியாணம் பண்ணப் போறார்…அதுக்கு தேவையான ஏற்பாடுகள செய்ய இந்த லோனுக்கு எப்ளை பண்ண போறதா அவர் தகப்பனுக்கு சொன்னதாம்..தகப்பனும் அதுக்கு சரி எண்டு சொன்னதாம்…உண்மையா அப்படி ஒரு லோன் கிடைக்குதா..அது லேசில கிடைக்குமானும் இதுமூலம் பார்க்கலாமே..” என்று உள்வீட்டு சங்கதியை சொன்னார் புஞ்சிபண்டா…

” அட..அப்படியா …”என்று கூறிய கந்தையா அண்ணன் ” ஏன் மஹிந்த திடீர் என்று மாலைதீவு போனாராம் ?” என்று கேள்வியை முன்வைத்தார்.

” மாலைதீவு அரசியல் தலைவர்கள் மஹிந்தவோட நெருக்கமான ப்ரெண்ட்ஸ்…அவங்க வர சொன்னதால போயிருக்கார்…ப்ரைவட் விசிட் தான்…ஆனாலும் அங்க சில பொலிட்டீசியன்ஸ அவர் சந்திப்பார் …இன்னொரு மேட்டர்…கம்போடியாவுக்கு போக இருந்தார் மைத்ரி…அந்த விசிட்ட அவர் கேன்சல் பண்ணிட்டதா கேள்விபட்டேன்..ஏனெண்டு தெரியாது…” தகவல் சொன்னார் புஞ்சிபண்டா…

” பண்டா ஐயா…ஹிருணிக்கா என்ன இன்றைக்கு ஒரே கத்திக் கொண்டிருந்தா…? கேட்டார் நயீம் நானா..

” அவ ஒரு ப்ரோக்ரேம்ல ஐ ரீ என் ல பேசவிருந்தது…ஆனா அவவ அதுக்கு எடுக்க வேணாம்னு பிரெசிடெண்ட் ஒப்பீஸ்ல இருந்து ஓடர் போயிருக்குது …ரீ வி ஸ்ரேஷன்ல உள்ள ஆக்கள் இத சொல்ல கொதிச்சு போன ஹிருணிக்கா ,தண்ட பேஸ்புக் பக்கத்தில மைத்ரிய கிழி கிழியெண்டு கிழிச்சிருக்கா…அந்தாள் பழசையெல்லாம் மறந்திட்டாரெண்டு சொல்லி ஏசியிருக்கா…” என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் புஞ்சி பண்டா…

”சரி…கிளம்புவம்..இன்றைக்கு ஜனாதிபதி ஐயா பேசிய பேச்சு நல்ல இல்ல பாருங்கோ…குடு வித்தா பிரபாகரன் போராட்டம் செஞ்சவர்?…தமிழ் ஆக்களின்ர ஓட்டுக்கள எடுத்துப் போட்டு இப்போ அவர் இப்படி பேசுறது நல்ல இல்லை… அடுத்த எலெக்சனில இருக்குது விளையாட்டு…” என்று கூறியபடி கந்தையா அண்ணண் புறப்பட்டது தயாராக மற்றவர்களும் செல்ல ரெடியாகினர் .