பெட்டிக்கடைப் பேச்சு

” நயீம் நானா எப்படி போகுது ஒங்கட அரசியல்….” வழமையான அரட்டையை ஆரம்பிக்கும் வகையில் கதைகொடுத்தார் புஞ்சி பண்டா .

பெட்டிக்கடைப் பேச்சு – 01

” நயீம் நானா எப்படி போகுது ஒங்கட அரசியல்….” வழமையான அரட்டையை ஆரம்பிக்கும் வகையில் கதைகொடுத்தார் புஞ்சி பண்டா .

”போகுது போகுது…பார்க்கிறீங்க தானே… எல்லா இடங்களிலயும் ஒரே பொலிட்டிக்ஸ் தான்…எந்த எலெக்சன் வரப்போதுவுதெண்டு தெரியல்ல…ஆனா ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் நிறைய பேர் ரெடி ஆகி இரிக்கிறாங்க என்ட வாப்போ….” தனக்கேயுரிய கிண்டலும் கேலியுமாய் சொன்னார் நயீம் நானா…

புஞ்சி பண்டாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை…” சஜித் தான் ஹாஜியார் அடுத்த கொமன் கெண்டிடேட்.. இருந்து பாருங்க… அவர அந்த இடத்திக்கு போட்டு வெத்த வச்சு.. பிறவு பார்லிமென்ட் எலக்சனில போட்டிபோட மைத்ரி மாத்தயா யோசிக்கிறது… எக்ஸக்கட்டிவ் பிரேசிடண்ட் சிஸ்டத்த மாத்திப் போட்டு எக்ஸக்கட்டிவ் ப்ரைமினிஸ்டரா வர மைத்ரி ட்ரை பண்ணுறது..” என்று படாரென பிரம்மரகசியத்தை போட்டுடைத்தார் பண்டா..

” எல்லாம் பேச நல்லாத்தான் இருக்கும்…யூ என் பி ட கட்சி யாப்பு சொல்லவா வேணும்..அங்க தலைவர மீறி ஒண்டும் செய்ய ஏலாது..ஜே ஆர் அப்படித்தான் அத அமைச்சிருக்கிறார்…சஜித் வேண்டுமெண்டா ஆசப்படலாம் …ஆனா ஆசைப்பட்ட எல்லாம் கிடைக்குமெண்டில்லைத்தானே…” என்று பூடகமாய் சொல்லி பத்திரிகையை விரித்து பார்க்க ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்..

”அது சரி ஹக்கீம் ஹாஜியார் நேத்து புது கத ஒண்ட சொல்லி இருக்கிது…எட்டேக்குக்கு ஐ எஸ் சம்பந்தம்  இருந்த மாதிரி தெரியேல்லை எண்டு… அது என்ன கத ..?” கேட்டார் புஞ்சி பண்டா.

” பண்டா ஐயா…அது வேறொன்றுமில்ல… ஐ எஸ் தொடர்பு இருந்த மாதிரி இதுவரை எந்த துப்பும் இதுவரை கிடைக்கேல்லையாம்…மறுபக்கம் இங்க சீனாவோட ஹோட்டலுக்கு அடிச்சு இந்தியாவோட தாஜ் ஹோட்டலுக்கு அடிக்காம விட்டது ஏன் எண்ட கேள்வி எழுந்திருக்காம் …தாஜ் ஹோட்டலுக்கு போன சூசைட்காரர் தன்னோட போனுக்கு வந்த மெஸேஜை பார்த்து வெளியே போனது ஏன் ?தயாசிறி சொன்னது போல அப்போ அந்த நேரம் ஹோட்டலுக்குள்ள இருந்த வீ ஐ பி யார்? இந்தியத் தூதுவர் அப்போ அதுக்குள்ள இருந்தாரா? என்ற கேள்வியெல்லாம் எழுந்திருக்கு… ஏனென்டா இப்போ இங்க நடக்கிற விசாரணைகளுக்கு சீனா சில டெக்னோலஜி ரீதியா சப்போர்ட் பண்ணுது..அதனால பல மெட்டர்கள் வெளிய வரலாம்…உலக பொலிட்டிக்ஸ் இது..என்னவும் நடக்கலாம்…அதெல்லாம் கூட்டிக் கழிச்சு தான் ஹக்கீம் அப்படி சொல்லி இருக்கலாம்..” என்று தனது அரசியல் மேதாவித்தனத்தை காட்டும் வகையில்சொன்னார் கந்தையா அண்ணன்.

”என்ன புஞ்சிபண்டா… அமைச்சர் திகாம்பரத்திற்கும் அவரது மினிஸ்ட்ரி செக்கரட்டரிக்கும் எதோ லடாயாமே…?உண்மையா ?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் கந்தையா அண்ணன்.

” புது அம்மோ…எப்படி இதெல்லாம் வெளிய வருது…உண்மைதான் கத…தொண்டமான் பவுண்டேசன் மோசடி பத்தி விசாரிக்க விசாரணைக்கு வரச் சொல்லி தொண்டமான் கோஷ்டிக்கு பார்லிமென்ட் கோப் கமிட்டி ஓடர் பண்ணி இருந்ததாம்.ஆனா அத முறையா கோர்டினேட் பண்ணாம மினிஸ்ட்ரி செக்கரெட்டரி நடந்துகொண்டது மினிஸ்டர் திகாம்பரத்துக்கு கடுப்பாகியிருக்குதாம்…செக்கரெட்டரிய மாத்துறத பத்தி யோசிச்சுட்டு இருக்காராம் அவர்…” என்று தனக்குத் தெரிந்த தமிழோடு சுருக்கமாகச் சொன்னார் புஞ்சிபண்டா…

” ஒரு சங்கதி ஒன்று கேள்விப்பட்டேன்… அப்படியே ஷொக் அடிச்ச மாதிரி இருந்திச்சுவா..” என்று சிதம்பர இரகசியம் ஒன்றை சொல்லத் தயாரானார் நயீம் நானா..

நாற்காலியை முன்னே நகர்த்திய புஞ்சிபண்டாவும் கந்தையா அண்ணரும் ரகசியம் என்ன என்பதை அறிய ஆவலாக இருப்பதை உணர்த்தினர் ..

” நாட்டு பெரிய தலை ஒன்றோட மவன் ரெண்டு நாளைக்கு முன்ன கதிர்காமம் போயிருக்குது …அவரோட இந்தியாவில இருந்து வந்த மந்திரம் செய்யும் மந்திரக்காரனுங்க போனாங்களாம்…இரவிரவா அங்க விசேச பூசை நடத்தினதாம்..மறுநாள் காலேல மூணு முட்டைய கதிர்காமம் கோயில் வாசல்ல வச்சு உடைச்சாங்களாம் …ஒரு ரிசியு பேப்பர கூராக்கி அத யூஸ் பண்ணி முட்டைய உடைச்சாங்களாம் ..அவ்வளவு பெரிய மந்திரக்கார செட்….அடுத்த ப்ரெசிடெண்ட் எலெக்சனில வாப்பா வெல்ல இந்த வேல நடந்ததாம்….அந்த மூணு முட்டையும் மூணு பேர டார்கெட் பண்ணி செஞ்ச மந்திரமாம்…” என்று ஒரே மூச்சில் கூறி இரகசியத்தை பகிரங்கப்படுத்தினார் நயீம் நானா…

” ஓ அப்படி போகுதோ கதை…ஆசை யாரை விட்டது…” என்று வானத்தை பார்த்தபடி கூறினார் கந்தையா அண்ணர் ..

” மினிஸ்டர் பதவிகள இப்போதைக்கு எடுக்குற மாதிரி இல்ல…ரிஷார்ட்டும் ஹக்கீமும் கொஞ்சம் யோசிக்கிறாங்க போல..எப்படியோ எலெக்சன் ஒன்று வந்தா இந்த ட்ரெண்டை வச்சுக்கொண்டு போகலாம் எண்டு அவங்க பார்க்கிறாங்க…ஏற்கனவே கபீரும் ஹலீமும் மினிஸ்ட்ரி போஸ்ட்ட சொல்லாம கொள்ளாம ஜனாதிபதியிட்ட போய் எடுத்த கடுப்பில ரணில் ஐயா இருக்கும்போது இவங்கள் கொஞ்சம் நிதானமா இத டீல் பண்ணுவாங்க போல இருக்குது..” என்றும் கதையோடு கதையாக சொன்னார் கந்தையா…

”கல்முனை மேட்டர் எப்படி ஐயா..?” என்று கந்தையா அண்ணனை பார்த்துக் கேட்டார் நயீம் நானா..

” அரசாங்க அதிபர் தலைமைல மக்கள் பிரதிநிதிகள் இருதரப்பிலும் 15 பேர் என்று 30 பேர் கொண்ட ஒரு ரீம் போட்டு இத பத்தி ஆராய ரணில் ஓடர் போட்டிருக்கதா கேள்விப்பட்டேன்…அறிவிப்பு நாளைக்கு வரலாம்…” என்று கூறி கந்தையா அண்ணனும் எழ மற்றவர்களும் கிளம்பத் தயாராகினர் …