விளையாட்டு

பெடரர் – நடால் மோதல்

 

புதன்கிழமை சாம் குவெரியை 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய ரபேல் நடால், விம்பிள்டன் அரையிறுதியில் ரொஜர் பெடரருடன் விளையாடுவார்.

33 வயதான ஸ்பானியர், 2008 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குப் பிறகு முதல் முறையாக விம்பிள்டனில் பெடரரை எதிர்கொள்கிறார்.

‘ரொஜருக்கு எதிராக விம்பிள்டனில் விளையாடுவது குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்’ என்று நடால் குறிப்பிட்டுள்ளார்.

ஃபெடரர் மற்றும் நடால் ஆகியோர் இதுவரையில் 39 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

ஆனால் விம்பிள்டனில் மூன்று முறை மட்டுமே அவர்களுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றுள்ளது.

2006 மற்றும் 2007 இறுதிப் போட்டிகளில் சுவிஸின் பெடரர் வென்றதுடன், 2008 ஆம் ஆண்டில் நடால் வெற்றிபெற்றார்.